செவ்வாய், அக்டோபர் 04, 2011

.

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

...எங்கள் இறைவா! எங்களுக்கு வரிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்). 2:86



கொத்தும் குலையுமாக கொல்லப்பட்ட முஸ்லீம்களின் கல்லறைகள் காஷ்மீரில் கண்டுப் பிடிப்பு... அதிர்ச்சியூட்டும் தகவல்.

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடக்கிறதா என்பதைக் கண்டறிய காஷ்மீர் அரசின் மனித உரிமை ஆணையம் கடந்த மூன்று ஆண்டுகளாக புலணாய்வை மேற்கொண்டு வந்தது. அது தனது அறிக்கையை கடந்த 20ம் தேதி இந்திய அரசிடம் சமர்ப்பித்தது.
  
அதில் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் 38க்கும் மேற்பட்ட இடங்களை ஆய்வு செய்த வகையில் பெயரிடப்படாத 2.156 கல்லறைகள் காணப்பட்டதாகவும் மேல்படி கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு இந்த கல்லறைகள் சம்மதந்தமாக எந்த தகவலும் தெரியவில்லை என்றும் 1989ம் ஆண்டு டெல்லியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் காஷ்மீரை கொண்டு வந்ததிலிருந்து ராணுவத்துடன் எதிர்த்துப் போரிட்டு கொல்லப்பட்ட பிரிவினை வாதிகளின்  கல்லறைகளாக அது இருக்கலாம் என்றும், இதுவரை 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அதில் அதிகம் முஸ்லீம்கள் என்றும் கூறி முடிக்கிறது அந்த அறிக்கை. 

இவர்களின் இந்த அறிக்கையும் அரசுக்கு ஆதரவாக இருப்பதை கீழ்காணும் அவர்களின் மற்றொரு அறிக்கை சான்றுப் பகர்கின்றது.

இவர்கள் ஆய்வை மேற்கொள்ள சென்றப் பகுதிகளில் எல்லாம் இவர்களை அப்பாவி மக்கள் சூழ்ந்துகொண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் தங்களது பதவி உயர்வுக்காகவும் பரிசுகளுக்காகவும் ஆயுதம் ஏந்தாத நிராயுதபாணிகளையும், எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளாத அப்பாவிகளையும் சுட்டுக் கொன்று விட்டு அவர்களை தீவிரவாதிகள் என்று பொய்யான முத்திரைக் குத்தியும் பலரை கடத்திச் சென்று திருப்பி அனுப்பப்பட வில்லை என்றும் அவ்வாறு திருப்பி அனுப்பப்படாதவர்களும் திடீரென காணாமல் போனவர்களும் தான் மேற்காணும் கல்லறைகளாக காட்சி அளிக்கின்றனர் என்று திட்டவட்டமாகக் கூறிக்  குமுறியதாகவும் கடந்த 20 ஆண்டுகளில் அதிகாரப்பூர்வமாகப் பதிந்த காணாமல் போனோர் பட்டியல் மட்டும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர்கள் ஆவார்கள் என்று ''காணாமல் போனோர் பெற்றோர்கள் சங்கமும்'' அவர்களிடம் கூறி உள்ளது. 

இத்தனை தௌளத் தெளிவாக மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு பாதுகாப்புப் படை என்றப் பெயரில் முகாமிட்டுள்ள கொலைவெறிப் பிடித்த சங்பரிவாரங்களின் கைக் கூலிகளின்  அத்து மீறலை தோலுரித்துக் காட்டியப் பின்னரும் மேல்படி ஆணையம் அந்த 2.156 கல்லறைகளில் அடங்கப்பட்டிருப்பவர்களையும் அதுவல்லாமல் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சுட்டுக் கொல்லப்பட்டவர்களையும் ராணுவம் மற்றும் போலீஸாருடன் எதிர்த்துப் போரிட்டவர்கள் என்றும் பரிவிணைவாதிகள் என்றும் அநியாயமாக முத்திரையைக் குத்தியே அறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றனர்.

எந்த வகையிலும் தனக்கு அறவே உரிமை இல்லாத காஷ்மீரை ஆக்ரமித்துக் கொண்டு பல்லாயிரக் கணக்கான சுதந்திரப் போராளிகளையும், அப்பாவிப் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்றொழிப்பதற்கு காரணமாக அமைந்த இந்திய அரசு தரப்பில் அமைக்கப்பட்ட எந்த ஆணையமும் அரசின் ஊதுகுழலாகத் தான் இருக்குமேத் தவிர அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கும், அப்பாவிப் பொதுமக்களுக்கும் ஆதரவாக இருக்காது.





وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்