ஞாயிறு, அக்டோபர் 30, 2011

.


وَلاَ يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلاَّ تَعْدِلُواْ اعْدِلُواْ
...ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்!...5:8


 காஷ்மீர்  தனி நாடா ? அடிமை நாடா ?


காஷ்மீர் தனி நாடா ? அடிமை நாடா ? என்றத் தலைப்பில் 'நகரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இந்தியாவின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததிராய் அவர்கள் கலந்துகொண்டு காஷ்மீர் இந்தியாவின் ஒருப்பகுதியாய் எப்பொழுதும் இருந்ததில்லை என்றும் பிரிட்டனிடமிருந்து இந்தியா விடுதலை அடைந்ததும் காஷ்மீரின் மீது காலணி ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இருந்தது என்றும் கூறி அரங்கில் குழுமி இருந்தவர்களை ஆச்சரியத்தால் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார்.
 
அருந்ததிராய் அவர்கள் உண்மை வரலாற்றை எடுத்துச் சொன்னக் காரணத்திற்காக அவர் மீது ராஜதுரோக வழக்குப் பதியப் போவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து விட்டு சட்ட வல்லுனர்களை அணுகிக் கொண்டிருப்பதாக பத்திரிகை செய்தி கூறுகிறது.

உண்மையைச் சொன்ன அருந்ததிராய் மீது வழக்குத் தொடர பாய்ந்து நிற்கும் உள்துறை அமைச்சகத்துக்கு இந்தியக் குடி மக்கள் என்ற முறையில் நாமும் ஒருக் கேள்வியை வைக்கின்றோம் !

காஷ்மீரில் 660 தீவிரவாதிகள் இருப்பதாக இந்திய ராணுவம் கணக்கெடுத்து அறிவித்து விட்டு அவர்களை ஒடுக்கப் பொவதாகக் கூறி ஐந்து லட்சம் துருப்புகளை காஷ்மீருக்குள் அனுப்பியதாக சமீபத்திய டைம்ஸ் ஆஃப் இந்தியா புள்ளி விபரத்தை வெளியிட்டிருந்து.



தீவிரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் ஒடுக்கி காஷ்மீர் மக்களை காப்பாற்றப் போகிறோம் என்றுக்கூறி காஷ்மீருக்குள் ராணுவ சிப்பாய்கள் என்றப்பெயரில் ஐந்து லட்சம் மதவெறி ஊட்டிய பஜ்ரங்தள் குண்டர்களை அனுப்பியதில் அவர்களின் பயிற்சிக்கேற்ப கொலை, மற்றும் கற்பழிப்புகள் போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மனித மிருகங்களின் மீது 1994 லிருந்து 988 வழக்குகள் பதியப்பட்டதில் 25 வழக்குகளை மட்டும் கண்துடைப்புக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மீதி 965 வழக்குகள் குப்பையில் தள்ளப்பட்டுள்ளது

இந்தியாவில் மக்களாட்சி நடப்பது உண்மை என்றால் ? இந்தியாவில் மதசார்பின்மை பேணப்படுகிறது என்றுக் கூறுவது உண்மை என்றால் ? அந்த 965 வழக்குகளையும் முறையான விசாரனை நடத்தி விட்டு அருந்ததிராய் மீது வழக்குப் பதிந்து கொள்ளட்டும்.

கண் துடைப்புக்காக எடுத்துக் கொண்ட 25 வழக்குகளில் மட்டும் ராணுவ வீரர்கள் என்றப்பெயரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ராணுவ கோழைகள் 104 பேர் என்றும் அதில் 39 பேர் ராணுவ உயர் அதிகாரி(குண்டர்)கள் என்றும், 9 பேர் ஜூனியர் அதிகாரி(குண்டர்);கள் என்றும், 56 பேர் மேல்படி உயர் அதிகாரி(குண்டர்)களின் அடிவருடிகள் என்கின்ற அதிர்ச்சி தகவல் அறிந்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்வதற்காக வெட்கப்படுகின்றனர்.  

988  வழக்குகளையும் ஒன்று விடாமல் விசாரித்திருந்தால் ஐந்து லட்சம் பேரில் ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள் எனும் அளவுக்கு கடைந்தெடுத்த சங்பரிவார சிந்தனையாளர்கள் ராணுவ வீரர்கள் என்றப்போர்வையில் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதற்கு இன்னும் ஆதாரமாக காஷ்மீரில் நடப்பது வெளி உலக்கு தெரியக்கூடாது என்று பத்திரிகைகளுக்கு வாய் பூட்டு போட்டதை பத்திரிகையாளர்கள் வாயில் துணியை கட்டிக் கொண்டு 'நகர் வீதிகளில் போராட்டம் நடத்தியது சான்றாகும்

ஊழல் பெருச்சாளிகளையும், காமுக கயவர்களையும் சுதந்திரமாகத் சுற்றித் திரியவிட்டு உண்மையைச் சொன்ன என் மீது வழக்குப் பதிந்தே ஆகவேண்டும் என்றால் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று அருந்ததிராய் அறிவித்து விட்டார்.

உள்துறை அமைச்சருக்கு முதுகெலும்பிருந்தால் அருந்ததிராய் மீது வழக்குப்பதியட்டும்.

இதைத்தான் காஷ்மீரில் வாழும் ஒவ்வொரு காஷ்மீரிகளும் எதிர்பார்க்கின்றனர். இந்தியாவில் வாழும் அருந்ததிராய் போன்ற படித்த நடுநிலையான ஹிந்துக்களும் எதிர்பார்க்கின்றனர்.

மதவெறிப் பயிற்சி அளிக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் மனித விலங்குகளால் காஷ்மீரத்து சகோதர, சகோதரிகளையும், பச்சிளம் பாளகர்களையும் பாய்ந்து பிராண்டும் செய்தி அறிந்து துடியாய் துடிக்கும் உலக முஸ்லீம்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கின்றனர்.

காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள நினைக்கும் இந்தியாவிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் உலக அரங்கில் தலைகுணிய வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் ஒபாமாவின் இந்திய  வருகையை காரணம் காட்டி பின்வாங்கி விட்டது.

காஷ்மீர் இந்தியாவின் ஒருப்பகுதி தான் என்பதில் உண்மை இருந்தால் ஒபாமாவுக்கு ஏன் இவர்கள் பயப்பட வேண்டும் ?


அவர்களையாவது வாழ விடுங்கள்
ஏற்கனவே இந்தியாவை நேசித்து இந்திய அரசுக்கு வரி செலுத்திக் கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு வாழ்வுரிமை மறுத்து அன்னிய தேசத்து அதிகளாக்கி விட்டதுப் போதாது என்று அண்டை முஸ்லீம் நாடாகிய காஷ்மீரையும் இணைத்துக் கொண்டு அவர்களையும் அன்னிய தேசத்து அடிமைகளாக்க நினைக்காமல் தயவு செய்து அவர்களையாவது நிம்மதியாக வாழ விடுங்கள்.

இன்று சீனா தயாரித்துள்ள சீனாவின் புதிய வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை உள்ளடக்கி வரைந்து துணிச்சலுடன் வெளியிட்டிருக்கிறது. காஷ்மீர் எங்கள் பகுதி என்று உரிமைக் கோரும் இந்தியாவுக்கும், அருனாச்சலப்பிரதேசம் எங்கள் பகுதி என்று உரிமைக் கோரும் சீனாவுக்கும் எந்த வித்தியாசமில்லை.

இதிலும் கட்டப் பஞ்சாயத்து செய்ய முயற்சித்தால் ?
காஷ்மீரை ' மான் இந்திர மஹேந்திர ராஜ ராஜேஸ்வர மஹா ராஜாதி ராஜா 'ஹரிசிங் என்ற மன்னன் கையில் மவுன்ட் பேட்டன் விட்டுச் சென்றதாலும், ஹரிசிங் மன்னன் ஹிந்து என்பதாலும் ஏராளமானத் துறவிகளும், சாமியார்களும் காஷ்மீரை இந்தியாவின் ஒருப்பகுதி தான் என்று திட்டவட்டமாகக் கூறுவதால் பெரும்பான்மை ஹிந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் காஷ்மீர் இந்தியாவின் ஒருப்பகுதி தான் என்ற தீர்ப்பை சொல்ல வைத்து அதன் மூலமாக அருந்ததிராய் அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து காஷ்மீரை தனதாக்கிக் கொள்ளலாம் என்ற சதிதிட்டம் தீட்டுவதற்காக ஒபாமா திரும்பி சென்றப்பிறகு சட்ட வல்லுனர்களையும், டிவி சர்மாப் போன்ற தொடை நடுங்கி நீதிபதிகளையும் தேடி அலைந்தால் ?

தெரிந்து கொள்ளட்டும் பாபர் மஸ்ஜித் விவவாரத்தில் வழங்கப்பட்டத் தீர்ப்பால் இந்திய நீதித்துறையின் முகத்தில் உமிழப்பட்ட உலக மக்களின் உமிழ்நீர் காயாத வடுவாக இருப்பதை நிணைவு படுத்திக் கொள்கிறோம்

உணர்வுக்கு எழுதியக் கட்டுரை



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

செவ்வாய், அக்டோபர் 04, 2011

.

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

...எங்கள் இறைவா! எங்களுக்கு வரிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்). 2:86



கொத்தும் குலையுமாக கொல்லப்பட்ட முஸ்லீம்களின் கல்லறைகள் காஷ்மீரில் கண்டுப் பிடிப்பு... அதிர்ச்சியூட்டும் தகவல்.

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடக்கிறதா என்பதைக் கண்டறிய காஷ்மீர் அரசின் மனித உரிமை ஆணையம் கடந்த மூன்று ஆண்டுகளாக புலணாய்வை மேற்கொண்டு வந்தது. அது தனது அறிக்கையை கடந்த 20ம் தேதி இந்திய அரசிடம் சமர்ப்பித்தது.
  
அதில் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் 38க்கும் மேற்பட்ட இடங்களை ஆய்வு செய்த வகையில் பெயரிடப்படாத 2.156 கல்லறைகள் காணப்பட்டதாகவும் மேல்படி கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு இந்த கல்லறைகள் சம்மதந்தமாக எந்த தகவலும் தெரியவில்லை என்றும் 1989ம் ஆண்டு டெல்லியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் காஷ்மீரை கொண்டு வந்ததிலிருந்து ராணுவத்துடன் எதிர்த்துப் போரிட்டு கொல்லப்பட்ட பிரிவினை வாதிகளின்  கல்லறைகளாக அது இருக்கலாம் என்றும், இதுவரை 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அதில் அதிகம் முஸ்லீம்கள் என்றும் கூறி முடிக்கிறது அந்த அறிக்கை. 

இவர்களின் இந்த அறிக்கையும் அரசுக்கு ஆதரவாக இருப்பதை கீழ்காணும் அவர்களின் மற்றொரு அறிக்கை சான்றுப் பகர்கின்றது.

இவர்கள் ஆய்வை மேற்கொள்ள சென்றப் பகுதிகளில் எல்லாம் இவர்களை அப்பாவி மக்கள் சூழ்ந்துகொண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் தங்களது பதவி உயர்வுக்காகவும் பரிசுகளுக்காகவும் ஆயுதம் ஏந்தாத நிராயுதபாணிகளையும், எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளாத அப்பாவிகளையும் சுட்டுக் கொன்று விட்டு அவர்களை தீவிரவாதிகள் என்று பொய்யான முத்திரைக் குத்தியும் பலரை கடத்திச் சென்று திருப்பி அனுப்பப்பட வில்லை என்றும் அவ்வாறு திருப்பி அனுப்பப்படாதவர்களும் திடீரென காணாமல் போனவர்களும் தான் மேற்காணும் கல்லறைகளாக காட்சி அளிக்கின்றனர் என்று திட்டவட்டமாகக் கூறிக்  குமுறியதாகவும் கடந்த 20 ஆண்டுகளில் அதிகாரப்பூர்வமாகப் பதிந்த காணாமல் போனோர் பட்டியல் மட்டும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர்கள் ஆவார்கள் என்று ''காணாமல் போனோர் பெற்றோர்கள் சங்கமும்'' அவர்களிடம் கூறி உள்ளது. 

இத்தனை தௌளத் தெளிவாக மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு பாதுகாப்புப் படை என்றப் பெயரில் முகாமிட்டுள்ள கொலைவெறிப் பிடித்த சங்பரிவாரங்களின் கைக் கூலிகளின்  அத்து மீறலை தோலுரித்துக் காட்டியப் பின்னரும் மேல்படி ஆணையம் அந்த 2.156 கல்லறைகளில் அடங்கப்பட்டிருப்பவர்களையும் அதுவல்லாமல் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சுட்டுக் கொல்லப்பட்டவர்களையும் ராணுவம் மற்றும் போலீஸாருடன் எதிர்த்துப் போரிட்டவர்கள் என்றும் பரிவிணைவாதிகள் என்றும் அநியாயமாக முத்திரையைக் குத்தியே அறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றனர்.

எந்த வகையிலும் தனக்கு அறவே உரிமை இல்லாத காஷ்மீரை ஆக்ரமித்துக் கொண்டு பல்லாயிரக் கணக்கான சுதந்திரப் போராளிகளையும், அப்பாவிப் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்றொழிப்பதற்கு காரணமாக அமைந்த இந்திய அரசு தரப்பில் அமைக்கப்பட்ட எந்த ஆணையமும் அரசின் ஊதுகுழலாகத் தான் இருக்குமேத் தவிர அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கும், அப்பாவிப் பொதுமக்களுக்கும் ஆதரவாக இருக்காது.





وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்